சேலை – குறும்படம் விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் தீபா சங்கருடன் இணைந்து இளம் படைப்பாளிகளினால் உருவான உணர்ச்சிப்பூர்வமான நெய்தல் இந்த “சேலை”.

ஆண்துணை இல்லாமல் குழந்தையை வளர்த்த தாயின் தன்மையையும்,எத்தனை கவலை துன்பம் இருந்தாலும்.. மகன் மீது இருக்கும் அன்பையும், எவரிடமும் விட்டு கொடுக்காத தாயாக தீபா சங்கரின் நடிப்பு உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது.

ஒரு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையேயான காட்சிகள், பேசிக்கொள்ளும் நடைமுறை.. திருவிழா காட்சிகள் இது அனைத்தும் இயல்பாகவும், அழகாகவும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ வேணுவாசன் காட்சிபடுத்தியுள்ளார்.

அம்மா மகனும் மௌனத்திலேயே இருவரும் தங்கள் அன்பை புரிய வைக்கும் காட்சிகளில் இசையமைப்பாளர் சரண் வெற்றிபெற்றுள்ளார்.

இயக்குனர் விஜய் கார்த்திக்கேயனே கலை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளதால் தனக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக அமைத்துள்ளார்.

படத்தொகுப்பு: மணிக்குமரன் (பியார் பிரேமா காதல்)

பாடகர்: வேல்முருகன்

கடைக்குட்டி சிங்கம் தீபா சங்கர்

இப்படி சினிமா பிரபலங்களும் இந்த இளம் பட்டாளத்தின் திறமையையும் ஊக்குவித்து இவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பாராட்டுக்குரியது.

தாய்க்கும் மகனுக்கும் இடையேயான.. உறவை உணர்ச்சிபூர்வமாக இயக்கி இருக்கும் இளம் இயக்குனர் விஜய் கார்த்திக்கேயனுக்கும், இப்படி ஒரு அழகான தரமான “சேலை” உருவாக நெய்தலில் பங்காற்றிய அனைத்து இளம் படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

 

Rating 3/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *