Penguin Review

Amazon Prime OTT தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கிறது இந்த தமிழ் சினிமாவின் இரண்டாவது குயின் “பெண்குயின்”

கார்த்திக் சுப்பராஜ் வெளியீட்டில், இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்திசுரேஷ் நடிப்பில்..சந்தோஷ் நாராயணனின் இசையில் வெளியாகி இருக்கும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

ஒரு சார்லிசாப்ளின் முகமூடி அணிந்த மர்ம நபரால் தன் குழந்தை கடத்தப்பட்டு அவனை பற்றி எந்த விவரமும் தெரியாமல் ஆறு வருடம் கடந்து.. மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாக போகும் ஒரு கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு ஆறு வருடம் முன்பு தொலைந்து போன மகன் இன்னும் சாகவில்லை கண்டிப்பாக கிடைப்பான் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப மீண்டும் அந்த மகன் கிடைக்க… அவன் மனநிலை அசாதாரணமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து அவனை பழைய நிலைக்கு கொண்டு வரவும், மீண்டும் தன் மகனை பின் தொடரும் அந்த மர்ம நபரிடம் இருந்து மகனை காப்பாற்ற போராடும் ஒரு கர்ப்பிணி தாயின் கதையே இந்த பெண்குயின்.

படத்தின் முதல் பாதி 15 நிமிடம் சற்று பொறுமையை சோதித்தாலும், அதன் பின் திரைக்கதையில் கொஞ்சம் வேகம் பிடிக்க, பின் சில ட்விஸ்ட் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகளோடு இடைவேளை வரை கொண்டு செல்கிறது.

இரண்டாம் பாதியில் தன் மகன் போல மேலும் நான்கு குழந்தைகள் ஊரில் கடத்தப்பட்டு இருப்பதை தெரிந்து.. பின் கடத்தியவர் யார் என கீர்த்திசுரேஷ்-க்கு தெரிய வர, அதன் பின் திரைக்கதையில் தொய்வும்.. பின் யார் எதற்க்காக தன் மகனை கடத்தியதன் காரணத்தை கண்டுபிடிக்க..அந்த காரணம் வலுவானதாக இல்லாததால் மனதில் பெரியதாக பாதிப்பு ஏற்படவில்லை என்பதே உண்மை…

படத்தினுடைய மிகப்பெரிய பலம் கீர்த்திசுரேஷ் நடிப்பும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் மட்டுமே.

கடத்தப்பட்டதற்கான காரணத்தையும் கிளைமாக்ஸ் காட்சியையும் இன்னும் சற்று வலுவாக எழுதப்பட்டிருந்தால் அனைவராலும் பாராட்டு பட்டு இருக்கும்.

மொத்தத்தில் ஒரு கர்ப்பிணி தாயின் பாச போராட்டத்தையும், தாய்மையின் வலிமையும் எடுத்துக்காட்டுகிறது இந்த பெண்குயின்.

 

Rating 2.75/5

 

4 thoughts on “Penguin Review

  • June 19, 2020 at 11:05 am
    Permalink

    Good to read it, this is a decent review against penguin. And try to catch up some more Tamil words while writing da thambi. Way to go !!!

    Reply
  • June 19, 2020 at 12:17 pm
    Permalink

    Good review. Thank you

    Reply
  • June 19, 2020 at 3:38 pm
    Permalink

    Good review.👏🏻👏🏻

    Reply
  • June 19, 2020 at 4:48 pm
    Permalink

    Good review 👌 ninga sonna review padam patha mari erudichi. Keep going bro 💪💯 all the best 💯

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *