சூரரை போற்று படத்திற்கு U சான்றிதழ்

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெர்ஆஃ, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் 2D என்டேர்டைன்மெண்ட் மற்றும் சிக்ஹ்ய என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் படம் சூரரை போற்று. இந்த படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் யூடுபியில் வெளியாகி பல மில்லியன் பார்வைகளை பெற்றது. இந்த படம் Air Deccan நிறுவனர் மாறும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியான GR கோபிநாத் அவர்களது வாழ்க்கையை பற்றியது.

சுதா கொங்கரா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான இறுதி சுற்று திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது. அதனால் சூர்யா ரசிகர்கள் சூரரை போற்று திரைப்படத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் GV பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் சென்சார் சர்டிபிகேட்டை வெளியிட்டுள்ளார். இந்த படம் U சர்டிபிகேட் பெற்றுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *